logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கள்ளில் (திருக்கள்ளம், திருக்கண்டலம்) ஸ்தல புராணம்

இறைவர் திருப்பெயர்: சிவானந்தேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: ஆனந்தவல்லி.

தல மரம்:

தீர்த்தம் : நந்தி தீர்த்தம். சிவானந்த தீர்த்தம்

வழிபட்டோர்: சம்பந்தர், சேக்கிழார், பிருகு முனிவர்.

Sthala Puranam

kallil temple

  • அகத்தியர் வழிபட்ட தலம். அகத்தியருக்கு சிவபெருமான் சோமாஸ்கந்தர் ஆகக் காட்சி தந்தார்
  • பிருகு முனிவர் கள்ளில் மலர்களால் இங்கு சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டார். சிவபெருமான் அவருக்கு சிவசக்தி ஸ்வரூபமாக அம்பாளைத் தன் மடியில் அமர வைத்து சக்தியுடன் இணைந்த தக்ஷிணாமூர்த்தியாகக்  காட்சியளித்தார்.
  •  

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :    சம்பந்தர்    -    1. முள்ளின்மேல் முதுகூகை (1.119); பாடல்கள்     :   சேக்கிழார்    -      மன்னு திருப்பதிக (12.28.1013) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

Specialities

  • மக்கள் வழக்கில் திருக்கள்ளம், திருக்கண்டலம் என வழங்கப்படுகிறது.
  • சுவாமி விமானம் தூங்கானைமாட அமைப்புடையது.
  • மூலத் திருமேனி சிவலிங்கம்; சதுர ஆவுடையார்.
  • முருகப்பெருமாள் வலதுகையில் ஜெபமாலை இடது கையில் தீர்த்த கலசத்துடன் காட்சியளிக்கிறார்.
  • 5 நிலை இராஜகோபுரம் உள்ளது 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னை - பெரியபாளையம் பேருந்து சாலையில் கன்னிகைப்பேர் என்று வழங்கும் கன்னிப்புத்தூரையடைந்து, அங்கிருந்து 2-கி. மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். இத்தலம் வெங்கல் கிராமத்திற்கும் கன்னிகைப்பேருக்கும் இடையில் கன்னிகைப்பேருக்கு அண்மையில் உள்ளது. தொடர்பு : 044 - 27629144, 09941222814

Related Content

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருக்குரங்கணில்முட்டம் தலவரலாறு

திருமாகறல்

திருவோத்தூர் கோயில் தலவரலாறு (திருவத்திபுரம், செய்யாறு)

திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)