logo

|

Home >

hindu-hub >

temples

திருவூறல் (தக்கோலம்) ஜலநாதேஸ்வரர் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: ஜலநாதேஸ்வரர், உமாபதீசர்.

இறைவியார் திருப்பெயர்: கிரிராஜ கன்னிகை, மோகனவல்லி.

தல மரம்:

தீர்த்தம் : நந்தி தீர்த்தம். பார்வதி தீர்த்தம்

வழிபட்டோர்:பார்வதி , காமதேனு, சம்வர்த்தமுனிவர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், திருமூலர், சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

Tiruooral temple

  • நந்திதேவரது வாயினின்றும் நீர் சுரப்பதாலும், இறைவனது திருவடியினின்றும் நீர் சுரப்பதாலும் ஊறல் என்று வழங்குவதாயிற்று. 
  • பார்வதி தேவி வழிபட்ட திருமேனி. பார்வதி தேவி அணைத்த தடம் சிவலிங்கத் திருமேனியில் உள்ளது
  • காமதேனு வழிபட்டது 
  • சம்வர்த்தமுனிவர் பூசித்துப் பேறு பெற்றதலம்.
  • ப்ருஹஸ்பதியின் தம்பி உததி முனிவர் தன் நோய் நீங்க சிவபெருமானை வழிபட நந்தி தேவர் தன் வாய் வழியாக கங்கையை வெளிப்படுத்தினார். அதில் நீராடி சிவபெருமானை வழிபட்டு முனிவர் நோய் நீங்கப் பெற்றார். ஜலம் சிவபெருமானை சூழ்ந்து சென்றதால் ஜலநாதீஸ்வரர் எனப் பெயர் பெற்றார்.
  • மக்கள் வழக்கில் தக்கோலம் என்று வழங்கப்படுகிறது.
  • தக்கன் தலையைக் கொய்த தலம் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு ஓலமிட்டதால் 'தக்கன் - ஓலம் ' மருவி 'தக்கோலம் ' என்றாயிற்று என்று உள்ளூர்ச் செய்தி அறிவிக்கின்றது. (இதற்கு அரண்போல் தேரடிக்கு அருகில் வீரபத்திரர் கோயில் உள்ளது.)
  • சித்தாந்த சரபம் அஷ்டாவதானம் பூவை கல்யாண சுந்தர முதலியார் இத்தலத்திற்கு தலபுராணம் பாடியுள்ளார்.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்  :  சம்பந்தர்   -   1. மாறில் அவுணரரணம் (1.106); பாடல்கள்   :  அப்பர்      -     தெண்ணீர்ப் புனற்கெடில (6.7.7),                                   உஞ்சேனை மாகாளம் ஊறல் (6.70.8);                சுந்தரர்     -     சுற்றுமூர் சுழியல் (7.31.2);                திருமூலர்   -     தெள்ளமுது ஊறச் (10.9)  9ம் தந்திரம் - 05. தூல பஞ்சாக்கரம்; சேரமான் பெருமாள் நாயனார் -  பாடிய வண்டுறை (11.7.90) பொன்வண்ணத்தந்தாதி; பட்டினத்துப் பிள்ளையார்      -  ஆலையங் கார் (11.30.65) திருஏகம்பமுடையார் திருவந்தாதி; நம்பியாண்டார் நம்பி          -  நீட்டுவ ரோதத் (11.35.86) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி; சேக்கிழார்                     -  திருத்தொண்டர் பலர் சூழத் (12.28.1005) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                    முன்நின்று தொழுது ஏத்தி (12.29.283) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

 

Specialities

  • கோபுரத்தில் பலவகைச் சிற்பங்கள் உள்ளன; அவற்றுள் மார்க்கண்டேயருக்காக இறைவன் எமனை உதைத்தருளும் காட்சி காணத்தக்கது.
  • மூலவர் - சிவலிங்கத் திருமேனி; பிருதிவி (மணல்) லிங்கம்; தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம்; பழமையான மூர்த்தி.
  • மூலவர் உத்தராயண காலத்தில் செந்நிறமாகவும், தக்ஷிணாயண காலத்தில் வெண்ணிறமாகவும் காட்சியளிக்கிறார்.
  • சுவாமி சந்நிதி எதிரில் சாளரம் உள்ளது. 
  • சந்நிதிக்கு எதிரில் ஓரத்தில் சுரங்கப்பாதை உள்ளது. கல்லால் மூடப்பட்டுள்ளது. 
  • கோஷ்ட மூர்த்தங்களில் - தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குற்றுக்காலிட்டு அபூர்வ காட்சி தருகின்றார். (உத்கடிகாசனம் )
  • அருகில் ஓடும் கல்லாற்றின் கரையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் (கங்காதரேஸ்வரர்) கோயில் உள்ளது. இதன் மேற்கில் உள்ளது சத்திய கங்கை தீர்த்தம். கிழக்கில் உள்ள நந்தி வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்துகொண்டிருந்தது; தற்போது இல்லை. நந்தி வாயிலிருந்து விழும் நீர், சிவலிங்கத்தைச் சுற்றிச் சென்று வெளியில் வந்து, மீண்டும் மற்றொரு நந்தி வாயிலிருந்து விழுந்து, குளத்தில் நிரம்பி பின்னர் ஆற்றில் ஓடும் அமைப்பில் இது அமைந்துள்ளது.
  • சித்ரா பௌர்ணமியை ஒட்டி பத்து நாள் பிரமோற்சவம்.
  • கல்வெட்டில் ஜலநந்தீசுவரர் என்று வழங்கப்பெறும். இராஜகேசரிவர்மன் ஆட்சியில் கங்கமன்னன் பிருதிவிபதியால் வெள்ளிப்பாத்திரம் தானம் செய்யப்பட்டது (5 of 1197). அவன் மனைவி அருள் மொழிநங்கையால் கோதானம் செய்யப்பட்டது(7 of 1197). கோபார்த்திவேந்திரவர்மன் ஆட்சியில் துர்க்கைச்சிலைக்கு விளக்குக்கள் அளிக்கப்பட்டுள்ளன(14 of1197). திரிபுவனச்சக்ரவர்த்தி குலோத்துங்கன் ஆட்சியில் திருக்காளத்திதேவன் என்கிற யாதவனால் நிலம் தானம் செய்யப்பெற்றுள்ளது(16 of 1197). மற்றவை விளக்கிற்கும், மற்றச்செலவுகளுக்கும் பொன், பணம், நிலம், ஆடுகள், நெல் முதலியன வழங்கியதைத் தெரிவிக்கின்றன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னையிலிருந்தும் காஞ்சிபுரத்திலிருந்தும் நேரடி பேருந்து வசதி உள்ளது. காஞ்சியிலிருந்து 30-கி. மீ. தொலைவு; இருப்புப் பாதை நிலையம். தொடர்பு : 04177 - 246427

Related Content

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருக்குரங்கணில்முட்டம் தலவரலாறு

திருமாகறல்

திருவோத்தூர் கோயில் தலவரலாறு (திருவத்திபுரம், செய்யாறு)

திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)