logo

|

Home >

hindu-hub >

temples

திருக்குரங்கணில்முட்டம் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: வாலீஸ்வரர், கொய்யாமலர் நாதர்.

இறைவியார் திருப்பெயர்: இறையார் வளையம்மை.

தல மரம்:

தீர்த்தம் : காக்கைத்தீர்த்தம் (காக்கைமடு). வாலி தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார், வாலி, இந்திரன், எமன் முதலியோர்.

Sthala Puranam

kuranganilmuttam temple
குரங்கணில்முட்டம் திருக்கோயில் 
  • வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் முட்டம் (காகம்) வடிவிலும் இறைவனை வழிபட்ட தலம்; ஆதலின் இஃது குரங்கணில்முட்டம் என்ற பெயர் பெறலாயிற்று.
  • வாலியார் சிவபெருமானைப் பூஜை செய்வதற்கு கையால் மலர்களைப் பறிக்காமல் மரத்தை உலுக்கிப் பூஜை செய்தார். அவ்வாறு பறிக்காது - கொய்யாது - மலர்களை எடுத்துப் பூஜை செய்ததால் இறைவனுக்குக்  கொய்யாமலர் நாதர் என்று பெயர்
  • கோயிலுக்குப் பக்கத்தில் 'காக்கைத் தீர்த்தம்' என்னும் பெயரில் திருக்குளம் உள்ளது.

 

 

 

 

 

kuranganilmuttam temple

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சம்பந்தர்   -    1. விழுநீர்மழு வாள்படை (1.31); பாடல்கள்      :     அப்பர்     -      தெள்ளும் புனற்கெடில (6.7.8);                         சுந்தரர்    -      மூல னூர்முத லாய (7.12.3),                                           முந்தையூர் முதுகுன்றங் (7.31.1);                     சேக்கிழார்  -       அங்கண் அமரர் (12.28.984 & 985) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

 

 

Specialities

  • மேற்கு நோக்கிய சந்நிதி.
  • கோயில் வாயிலின் முகப்பில் அணிலும் காகமும் வழிபடும் சிற்பம் உள்ளது.
  • அம்பாள் பெயரை இப்பகுதி மக்கள் 'இளையாளம்மன்' என்று அழைக்கின்றனர்.
  • கோயிலுக்கு சற்றுத் தொலைவில் ஒரு பாறை குடைக் கோயிலாகக் காட்சியளிக்கிறது.
  • கல்வெட்டில் இத்தலம் 'காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம்' எனக் குறிக்கப்படுகிறது. இறைவன் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும், கொய்யாமலர் ஈசுவரதேவர் என்றும் குறிக்கப்படுகிறார்.
  • இப்பகுதி மக்களிடையே 'கொய்யாமலை' என்னும் பெயர் பலருக்கு இருப்பதை இன்றும் காணலாம்.
  • 6 கல்வெட்டுகள் உள்ளன. அவை கோநேரின்மைகொண்டான், குலோத்துங்கன், இராஷ்டிரகூட கன்னரதேவன், கிருஷ்ணதேவராயர் இவர்கள் காலத்தன. அவற்றால் இத்தலம் காளியூர்க்கோட்டத்து இருகழிநாட்டு மாவண்டூர்ப்பற்றத்துப் பல்லவபுரமான திருக்குரங்கணில் முட்டம் என்று குறிப்பிடப் பெறுகிறது(290 of 1902). கடவுள் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும், கொய்யாமலரீசுவர தேவர் என்றும் குறிப்பிடப்பெறுகிறார். பூஜா விருத்திக்காகச் சகம் 1451இல் கிருஷ்ணதேவ மகாராயர் பல்லவபுரம் கிராமத்தை அளித்தார்(295 of 1902) . இராஷ்டிரகூட கன்னரதேவன் ஸ்ரீ பலி பூஜைக்காக நிலம் அளித்தான். சம்புவராயரால் சத்திமங்கலமாகிற அம்மநல்லூர் கிராமத்தை நிவந்தமாகவிட நீறணிந்தான் சேதுராயனுக்கு உத்தரவிட்டான்(291 of 1902).

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்து சாலையில் பாலாற்றைத் கடந்து, 'தூசி' என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தொடர்பு : 09943295467

Related Content

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருமாகறல்

திருவோத்தூர் கோயில் தலவரலாறு (திருவத்திபுரம், செய்யாறு)

திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)

திருவல்லம் (திருவலம்) தலபுராணம்