logo

|

Home >

hindu-hub >

temples

திருவலஞ்சுழி தலபுராணம் Sthalapuranam of Thiruvalanchuzhi Temple

இறைவர் திருப்பெயர்: கபர்த்தீஸ்வரர், கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்.

இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி, பிருகந்நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், சேக்கிழார், உமையம்மை, திருமால், இந்திரன், பிரமன், ஆதிசேஷன், ஏரண்டமுனிவர் முதலியோர்

Sthala Puranam

 

 

view of the rAjagOpuram

 

 

  • ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பிலத்தினுள் (பாதாளத்தில்) அழுந்தியது. ஏரண்ட முனிவர் அப் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், இப் பெயர் பெற்றது.

     

  • அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது பூஜித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத் தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான்.

 

second entrance of the temple

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்     -	1. விண்டெலாமல ரவ்விரை (2.002),
                                        2. என்னபுண்ணியஞ் செய்தனை (2.106),
                                        3. பள்ளமதாய படர்சடை (3.106);

                     அப்பர்        -	1. ஓதமார் கடலின் (5.66),
                                        2. அலையார்புனற்கங்கை (6.72); 

           நக்கீரதேவ நாயனார்   -    1. வணங்குதும் (11.12) திருவலஞ்சுழி மும்மணிக்கோவை;

பாடல்கள்      :    அப்பர்        -       மருக லுறை (4.15.6), 
                                           பொன்னள வார் (4.105), 
                                           கற்றானைக் (6.01.2), 
                                           தெய்வப் புனற்கெடில (6.07.6), 
                                           ஏந்து மழுவாளர் (6.25.5), 
                                           பொருங்கைமதக் (6.33.1), 
                                           கொண்டலுள்ளார் (6.51.9), 
                                           புலிவலம் (6.70.11), 
                                           அலையார் (6.72.1), 
                                           கருவாகிக் (6.86.1), 
                                           கலஞ்சுழிக்குங் (6.93.6), 
                                           விரிசடையாய் (6.99.6); 

                      சுந்தரர்      -       மைகொள் கண்டன் (7.12.10), 
                                            நிறையனூர் (7.31.5); 

            கபிலதேவ நாயனார்   -       வந்தா றலைக்கும் வலஞ்சுழி (11.22.20) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை,  
            பரணதேவ நாயனார்   -       பார்மேவு கின்ற (11.24.53) சிவபெருமான் திருவந்தாதி; 

                   சேக்கிழார்      -       நல்லூரில் (12.21.215) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், 
                                            மதி புனைந்தவர் வலஞ்சுழி (12.28.379,380,381,383,389 & 1193) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், 
                                            அங்கு நின்று (12.29.68) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.       

 

    தல மரம் : வில்வம்

 

Specialities

  • திருவிடை மருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, அதற்குரிய பரிவாரத் தலங்களுள் இது, விநாயகர் தலம். இங்குள்ள வெள்ளைப் பிள்ளையார் கோவில் மிகச் சிறப்பானது.மிகவும் வேலைப்பாடுடையது.

     

  • சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.fine art of architecture

 

Contact Address

அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு இது, கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது. தொடர்புக்கு :- 0435 - 245 4421 , 245 4026.

Related Content