கோவை - திருவாசகப் புனிதர் பேரவை அறக்கட்டளையின் முப்பெரும் விழா
- - - - - - - - -

kOvai - Three big function (mupperum vizhA) of thiruvAchakap punithar pEravai aRakkaTTaLai
* * * * *

அமைவிடம்:

திருவாசகப் புனிதர் பேரவை அறக்கட்டளை, குருந்தம் எழில்ஞான வழிபாட்டுத் திருக்கூடம், எண்.33, 12-வது குறுக்குத் தெரு (மேற்கு), புதிய தில்லைநகர், வடவள்ளி, கோயம்புத்தூர் - 641 041. manivasagar@kurundam.com; www.kurundam.com

முப்பெரும் விழா:
  1. குருந்தம் எழில்ஞான வழிபாட்டுத் திருக்கூடத் திறப்பு விழா.

  2. இன்ப மணிவாசகருக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா.

  3. திருவாசகப் புனிதர் பேரவையின் ஐந்தாம் ஆண்டுத் துவக்க விழா.
சிறப்பு:

மன்னியதிருவருள் மலையாம் மேதகுசீர் மணிவாசகப் பெருமானின் ஐம்பொன் திருமேனியைப் முதல்முறையாக ஆறடி உயரத்தில் ஆயிரம் கிலோ எடையில் குருந்தக் கூடத்தில் எழுந்தருளச் செய்து, குறைவிலா நிறைவின் திருக்குறிப்பாலும் குன்றாத உணர்வுடைய பெருமக்களின் பேருதவினாலும் இத்திருப்பணியானது நிறைவாகின்ற்று.

திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா:

திருவள்ளுவர் ஆண்டு 2039 (சர்வதாரி) ஆனித் திங்கள் 23ம் நாள், (07 - 07 - 2008) திங்கட்கிழமை, மாமகநாண்மீன் பொருந்திய சீர்மிகு. மணிவாசகப் பெருமானின் குருபூசைத் திருநாளன்று காலை 09.00 மணிமுதல் 10.00 மணிக்குள் அருள்தரும் இன்பமணிவாசகப் பெருமானுக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவானது முழுமுதலை முத்தமிழால் போற்றும் முப்பெரும் விழாவாக அடியார்கள் புடைசூழ சீரும் திருவும் பொழிய நிகழ்வு முறையில் குறித்தவாறு நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி மணிவாசகப் பெருமானின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

			      பெருவேள்வி வழிபாட்டு நிகழ்வுமுறை

காரிக்கிழமை காலை விடைக்கொடியேற்றல், ஞாயிறு போற்றுதல், (சனிக்கிழமை) 5.00 மணிமுதல் ஐங்கரன் வேள்வி, நிறையவிநல்கல், ஆனித் திங்கள் 8.00 மணிவரை பூவட்டிப் போற்றுதல், திருமுறை முறையீடு, 21-ம் நாள் திருவடி விண்ணப்பம், பேரொளி வழிபாடு, 05-07-2008 குருந்தம் திறப்பு விழா அருளாரமுதம் வழங்குதல்.
பிற்பகல் அருட்குரவர்களை வந்தித்தல், அகயிருள்நீக்க " 4.00 மணிமுதல் திருவிளக்கேற்றல், ஆசகலத் தூநீர் தெளித்தல், 6.30 மணிவரை சிவத் தொடர்பூட்ட ஆனைந்தாட்டல், அருட் பணியாற்ற ஆணைபெறுதல், சீரானைக்கன்றை சிந்தை செய்தல், மேலும்.....
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருக்குடங்களை எழிலூட்டல், முப்பத்தெண்- ஆனித் திங்கள் 4.00 மணிமுதல் கலைகளைப் பதித்தல், மணிவாசகரை எழுந்தருள 22-ம் நாள் 6.30 மணிவரை வேண்டுதல், எரியோம்பல், நிறையவிநல்கல், 06-07-2008 பூவட்டிப் போற்றுதல், திருமுறை முறையீடு, திருவடி விண்ணப்பம், வேள்விச் சாலையில் வாயிற்காவலரை வந்தித்தல், மேலும்....
மாலை திருக்குடங்களை வேள்வி மேடையில் " 6.30 மணிமுதல் கொலுவேற்றிக் கொண்டாடுதல், முன்னின்று இரவு ஆண்ட முன்னெறி முத்தருக்கு மூவர் 8.30 மணிவரை தமிழாலே முதற்கால வேள்வி, நிறையவிநல்கல், வேள்வி நிறைவு, பூவட்டிப் போற்றல், திருமுறை முறையீடு, திருவடி விண்ணப்பம், பேரொளி வழிபாடு, அருளாரமுதம் வழங்குதல்.
திங்கட்கிழமை காலை மங்கல இசை, திருப்பள்ளியெழுச்சி, திருமேனிக்கு ஆனித் திங்கள் 5.00 மணிமுதல் ஆனைந்தாட்டல், திருக்காப்பணிதல், 23-ம் நாள் 9.00 மணிவரை இருள்கடிந்தருளும் இன்ப மணிவாசகருக்கு 07-07-2008 இருந்தமிழாலே இரண்டாம் கால வேள்வி கலைகள் நாடியின் வழியாக மூலத் திருமேனியை அடைதல், நிறையவிநல்கல், வேள்வி நிறைவு, பூவட்டிப் போற்றல், திருமுறை முறையீடு, திருவடி விண்ணப்பம், பேரொளி வழிபாடு.
" 9.30 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு
" 10.00 மணிக்கு இன்ப மணிவாசகப் பெருமானுக்கு திருக்குட நன்னீராட்டு அடியார்கள் அருளுரை, பதின்மங்கலக் காட்சி.
" பிற்பகல் பேரவையின் ஐந்தாம் ஆண்டுத் துவக்க விழா 2.00 மணிமுதல் மற்றும் நிகழ்ச்சிகள். மாலை 6.00 மணிவரை
Back to Important Events Page
Back to Shaivam Home Page