|
Home > Events
திருச்சிற்றம்பலம்
பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா அழைப்பிதழ் - - - - - - - - -
Invitation of Fifth year anniversary of continue periyapurANa lecture * * * * *
முருகன் புகழ்பாடும் சபை ஆண்ட அரசு உழவாரத்திருப் பணிக்குழு பதிவு எண்.: SJN - S193 2007-08, 20.02.2008 பெங்களூர்.
அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்
அதுவும் நான்படப் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள்
பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால்
மற்றுநான் அறியேன் மறுமாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
- சுந்தரர்.
மூலமான திருத் தொண்டத் தொகைக்கு முதல்வராய் இந்த
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தம்பிரான் தோழர்
காலை மலர்ச் செங்கமலக்கண் கழறிற் றறிவா ருடன்கூட
ஆலம் உண்டார் திருக்கயிலை அணைந்த தறிந்த படியுரைப்பாம்.
- பெரிய புராணம்.
தெய்வச் சேக்கிழார் அருளிய பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா ஆண்ட அரசு உழவாரத் திருப்பணிக் குழுவின் நாற்பதாவது உழவாரத் திருப்பணி விழாமலர் வெளியீடு.
"தொகையின் உறைப்பும் தோழமைத் திறமும்" ("தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகை தந்த உறைப்பும் அன்பு நீங்கா அச்சமுடன் அடுத்த திருத்தோழமைத் திறமும்")***********
நாள் : 15-06-2008, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரை
இடம் : ஸ்ரீமகான் ஒடுக்கத்தூர் சுவாமிகள் மடம்,
அலசூர் ஏரிக்கரை, கங்காதர செட்டித் தெரு, பெங்களூர்.
_____________________
அன்புடையீர், தெய்வச் சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணத் தொடர் சொற்பொழிவு 25-05-2003 அன்று தொடங்கப் பெற்று கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறப்புற நடந்து வருகின்றது. சென்ற நான்கு ஆண்டுகளிலும் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு முழுமையும் "கூடலையாற்றூர்" தொடங்கி "ஆரூர்" அடியொற்றித் "திருக்கச்சி ஏகம்பப்" பெருமானைக் காண இடக்கண் பெற்று, தொடர்ந்து திருவாரூரில் வலக் கண்ணும் பெற்ற பேரின்ப நிகழ்வு வரைக் கண்டோம். கண் இழ்ந்தது முதல் கண் பெற்றது வரை ("அழுக்கு மெய்கொடு" முதல் "மீளா அடிமை" வரை) சிறப்பு ஆரத்துடன் கண்டு வருகின்றோம்.
இந்த ஐந்தாவது ஆண்டு விழாமலர் நம்பியாரூரர் பற்றிய சிறப்பு மலராக வெளிவரத் திருவருள் கூட்டியுள்ளது. திருநாவுக்கரசர் பெருமானின் வலாற்றிலிருந்து சில பகுதிகளை நாடகமாக நான்காவது ஆண்டு விழாவிலும், பவானி (திருநணா) திருஞானசம்பந்தர் குருபூசை அறுபத்து மூவர் விழாவிலும் அமைத்துக்காட்டும் வாய்ப்பினைத் திருவருள் கூட்டியது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு விழாவில் ஆண்ட நம்பிகள் வரலாற்றின் சில பகுதிகளை நாடகமாக அமைத்துக் காட்ட இறைவன் திருவருளை எண்ணியுள்ளோம். இந்த் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகளிலும் தெய்வச் சேக்கிழார் குருபூசையிலும் கலந்துதவுமாறு வேண்டுகிறோம்.
நாள் : 15 - 06 - 2008, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணிவரை
இடம் : ஸ்ரீமகான் ஒடுக்கத்தூர் சுவாமிகள் மடம், (ஜோதி மன்றம்), பெங்களூர்.
இறை வணக்கம் : திருமதி சந்திரா சிவகுமார்
திருமதி விஜயலட்சுமி.
வரவேற்புரை : திரு. சு. கணேஷ் - பெரியபுராண வகுப்பு மாணவர்.
மேடை அமைப்பு : திரு. கோபால் - பெரியபுராண வகுப்பு மாணவர்.
நாடகம் : காலை 10.00 மணி முதல் 10.30 மணிவரை
"பித்தாபிறைசூடி பாடியது, திருத்தொண்டத் தொகை" பாடியது வரை.
காலை 10.30 முதல் 1.30 வரை திருமுறை விண்ணப்பம்,
இசை நிகழ்ச்சி : சேக்கிழார் எடுத்துத் தந்த பாடல்கள் திருமுறை இசைமாமணி
சிவ. பா. சற்குரு நாத தேசிகர், மயிலை கபாலீஸ்வரர் கோயில்,
சென்னை.
அடியார்க்கமுது : பகல் 1.30 முதல் 2.00 மணிவரை.
சிறப்பு 2.00 மணிமுதல் 3.00 மணிவரை
சொற்பொழிவு : திருமுறை அடிமை சிவ. பா. குமரலிங்கம் அவர்கள்,
பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றம் கோவை.
நாடகம் : 3.00 மணிமுதல் 4.00 மணிவரை
"திருவதிகையில் திருவடிதீக்கை, சங்கிலியார் திருமணம்".
4.00 மணிமுதல் 5.00 மணிவரை
சிறப்புச் செந்தமிழ் அரசு சிவ. கி. சிவகுமார் அவர்கள்,
சொற்பொழிவு : முருகன் புகழ் பாடும் சபை, நிறுவனர், சென்னை.
"பற்றாய பெருமான்"
5.00 மணிமுதல் 6.00 மணிவரை
தொகுப்புரை : பெரியபுராண வகுப்பின் தொகுப்புரை : செந்தமிழ்ச் செல்வர்
சிவ. சி. மதன்முரளி அவர்கள், பெரியபுராண வகுப்பு ஆசிரியர்.
6.00 மணிமுதல் 8.00 மணிவரை
நாடகம் : "பரவையார் தூது, கலிக்காமர் தோழமை, முதலையுண்ட
பாலகனை அழைத்தமை, கயிலை அணைந்தமை."
நன்றியுரை : திரு. சிவ. சீனிவான் அவர்கள், மாணிக்கவாசகர் அரமனை,
அசோக் நாகர், பெங்களூர்.
திருச்சிற்றம்பலம்
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|