|
Home > Events
காரைப்பாக்கம் அ/மி ஸ்ரீ மங்களாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ மாணிக்கவண்ணநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
kAraippAkkam srI mangkaLAmbikai samEtha srI mANikkavaNNar swAmy temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ மாணிக்கவண்ணநாதர் சுவாமி திருக்கோயில், காரைப்பாக்கம், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம்.
சிறப்பு:
இத்தலம் சமய குரவர்களால் பாடல் பெற்ற அநேக திவ்யஸ்தலங்களைத் தன்னகத்தே கொண்டதுமான இப்புண்ணிய பூமியாகிய செந்தமிழ் நாட்டிடை சோழநாட்டின் வற்றாத ஜீவநதியாம் கொள்ளிடம் நதியின் வடகரையில் அமைந்துள்ள காரைப்பாக்கம் கிராமத்தில் முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தத் சிவலிங்கத் திருமேனியாக மாணிக்கவண்ணநாதர் சுவாமி மங்களாம்பிகை சமேதராக அருள்பாளித்து வருகிறார்.
கும்பாபிஷேக விழா:
மங்களகரமான சர்வஜித் வருடம் மாசித் திங்கள் 12ம் நாள், (24 - 02 - 2008) ஞாயிற்றுக்கிழமை, சுக்கிலபட்சம் திருதியை திதியும், ஹஸ்த நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை மணி 09.00க்குமேல் 11.30க்குள் மேஷ லக்னத்தில் அ/மி ஸ்ரீ மங்களாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ மாணிக்கவண்ணநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால்; பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ மங்களாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ மாணிக்கவண்ணநாதர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|