Stop Legalised Antiquities Trade

There is a recent move by the government to legalize the trade of antique articles. We are concerned that this will promote vandalism of the ancient temples.

Petitioning here to register your concern

News item on this topic: The Economic Times

கலை மற்றும் தொல்பொருட்களின்
சட்டப்பூர்வ வர்த்தகத்தை தடைசெய்


"அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர்தீர்கவே"

மத்திய அரசின் பண்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. பழைய கலைப் பொருள்களை வெளி நாடுகளுக்குக் கடத்திச் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்டு அதே நேரத்தில் உள் நாட்டில் அவற்றை விற்க அனுமதி வழங்க யோசிப்பதாகத் தெரிகிறது.

இவ்வாறு சட்ட திருத்தம் கொண்டு வருவதால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது தடுக்கப்படும் என்று நம்பினாலும், உள்நாட்டுக்குள் அவற்றை விற்கலாம் என்று அனுமதித்தால் நமது கலைப்பொருள்களுக்கும், பாதுகாப்பின்றி கிடக்கும் நமது கலைச் செல்வங்களுக்கும் ஆபத்து வரும் என்பதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரியவில்லை. இம்மாதிரியான சட்டங்கள் கொள்ளையர்களுக்கு சாதகமாகவே அமையும் என்பது திண்ணம்.

நமது கிராமங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் ஆலயங்களின் கலைச் செல்வங்கள் களவாடப்படும் தற்போதைய நிலையில், இதுபோன்ற சட்ட திருத்தம் பேராபத்தையே விளைவிக்கும்.

நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தாலே "கலைப் பொருள்" என்று சட்டம் இருக்கும்போது அதை பாதுகாக்க வேண்டுமே தவிர, சட்டத்தைத் தளர்த்தி அவற்றை சட்டப்பூர்வமாக விற்பனை செய்வது என்பது மரத்தில் அமர்ந்து கொண்டு அவ்வடிமரத்தை வெட்டும் செயலாக அமையும்; என்பதுடன், நம் அனைவரின் மனதையும் வேதனைப்படுத்தும் செயலாகும்.

மத்திய அரசு தனது இந்த முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமது எதிர்ப்புகளை சொல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

உங்களது கருத்தை மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் பின்வரும் வலைத்தளத்தில் பதிவு செய்து கடமை ஆற்றுங்கள். பிறரையும் பதிவு செய்யச் சொல்லுங்கள்.

Petitioning here - எதிர்ப்பை இங்கே பதிவு செய்யுங்கள்

Thanks : The Economic Times

நன்றி : Aadalvallan.blogspot.in


Back to Important Events Page
Back to Shaivam Home Page