தண்டாங்கோரை அருள்மிகு ஸ்ரீ ஸர்வலோகஜனனி சமேத அருள்மிகு ஸ்ரீ கைலாஸநாத ஸ்வாமி திருக்கோயில்
ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

Thantangorai Sri Sarvalokajanani Samedha Sri Kailasanathar temple Jeernothaarana
ashtabhandana Maha Kumbabishekam
* * * * *


அமைவிடம் மற்றும் தல சிறப்பு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

அருள்மிகு ஸ்ரீ கைலாஸநாதர் திருக்கோயில், தண்டாங்கோரை, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற தேவார வைப்புத் தலமாகும். இருப்பினும், தற்போது இருக்கும் இக்கோயில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மானிக்கப்பட்டிருக்கலாம் எனச் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது. இங்கே வேதவிற்பன்னர்கள் கருடயாகம் போன்ற பல யாகங்களைப் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இத்திருக்கோயிலில் கருடயாகம் செய்த சுவடு இன்றும் காணப்படுகிறது.

கும்பாபிஷேக விழா
- - - - - - - - - - - - - - - - - - - -

நிகழும் மங்களகரமான நந்தன வருடம் ஆனித்திங்கள் 24-ம் நாள், (08 - 07 - 2012) ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமிதிதி, சதய நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 08.45 மணிக்குமேல் 10.48 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ ஸர்வலோகஜனனி சமேத அருள்மிகு ஸ்ரீ கைலாஸநாத ஸ்வாமி திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளதால்; அன்பர் பெருமக்கள், பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்பு :

தண்டாங்கோரை கிராமவாசிகள், மற்றும்
Tandankurai Village Temple Development Committee,
தண்டாங்கோரை.
Cont. No.09444976980, 09840093131.


Back to Important Events Page
Back to Renovation (thiruppaNi) Page
Back to Shaivam Home Page