78, கிளாம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி ஆலய ஜீர்ணோத்தாரண நூதன விமான பிம்ப பிரதிஷ்டா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

78, Kilampakkam Sri Akilandeswari Udanurai Sri Agastheeswarar temple Jeernothaarana
noothana vimaana pimba prathishta ashtabhandana Maha Kumbabishekam
* * * * *


அமைவிடம் மற்றும் தல சிறப்பு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், 78, கிளாம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

ஸ்ரீ அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம்; முதலாம் இராஜராஜன் மற்றும் அவர் அமைச்சர்கள் கி.பி.1004-ம் ஆண்டுகளில் இத்தல இறைவனை ஆராதித்து வந்ததாக இத்தல கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

கும்பாபிஷேக விழா
- - - - - - - - - - - - - - - - - - - -

நிகழும் மங்களகரமான நந்தன வருடம் ஆனித்திங்கள் 15-ம் நாள், (29 - 06 - 2012) வெள்ளிக்கிழமை, சுக்லபக்ஷ தசமி திதி, சுவாதி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 07.30 மணிக்குமேல் 09.30 மணிக்குள் கடக லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளதால்; அன்பர் பெருமக்கள், பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்பு :

	கிராம பொதுமக்கள், 
	ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் இறைபணி மன்றம்,
	78, கிளாம்பக்கம்.


Back to Important Events Page
Back to Renovation (thiruppaNi) Page
Back to Shaivam Home Page